தாய் ஒருவர் தனது 13 வயது மகளை வைத்து விபச்சார தொழில் செய்து வந்ததாக லக்கல பகுதியில் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பிரதேசவாசிகள் மூலம் பொலிசாருக்கு கிடைத்த தகவல்களையடுத்து லக்கல பிரதேச போலீசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
குறித்த இளவயது மகளை தாய் நாவுளை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவருடன் அனுப்பியிருந்த நிலையில் போலீசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சிறுமியும் அந்நபரும் தம்புள்ளை இப்பன் கட்டுவ பிரதேசத்தில் ஒரு ஹோட்டலில் வைத்து அகப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து அந்நபர், அச்சிறுமியின் தாய் மற்றும் இளவயது சிறுமிக்கு அறை வசதி வழங்கிய ஹோட்டல் உரிமையாளருக்கும் எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
