விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணி (ஜாதிக நிதஹஸ் பெரமுண) கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் மூவர், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க, வட மத்திய மாகாண சபை உறுப்பினர் பீ.பி. குமார மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான பியசிறி விஜேநாயக்க ஆகியோரே இவ்வாறு சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த அவர்கள், ஜனாதிபதியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளனர்.