Saturday, May 19, 2018

ரொட்டவெவ கஞ்சா விவகாரம்; பொலிஸ் சாஜன் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் வைத்தியசாலையில்

திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் வீடொன்றில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து வீட்டை சோதனையிடச்சென்ற பொலிஸ் சார்ஜன் உட்பட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் தாக்குதலுக்குள்ளான நிலையில் இன்று (19) பிற்பகல் 1.30 மணியளவில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாக்குதலினால் ரொட்டவெவ பொலிஸ் நிலைய சார்ஜன் ஜெய்னுதீன் (59438) மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான் ஜெய்னுலாப்தீன் ஹூஸைன் ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது ரொட்டவெவ பகுதியிலுள்ள வீடொன்றில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அவ்வீட்டை சோதனையிட்ட போது 345 கிரேம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாகவும் அவ்வீட்டு உரிமையாளரை கைது செய்துள்ளதாகவும் இதேவேளை பொலிஸார் சோதனையிட்ட போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபரொருவரையும் கைது செய்துள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இன்னும் பொலிஸாரின் சுற்றிவளைப்பின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
Image result for kerala ganja]
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured