Thursday, June 20, 2019

IS ஐஎஸ் கிளர்ச்சியாளர்களினால் இலங்கைக்கு புதிய அச்சுறுத்தல் ; இந்திய ஊடகம் தகவல்


Image result for isis slஇலங்கை மற்றும் இந்தியா ஆகியன ஐஎஸ் கிளர்ச்சியாளர்களின் அடுத்த இலக்காக மாறியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன,

சிரியா மற்றும்  ஈராக்கில் ஐஎஸ் அமைப்பின் வலு குன்றிய நிலையில் ஐஎஸ் அமைப்பு இந்த நகர்வினை மேற்கொண்டுள்ளதாக இந்திய புலனாய்வுத்துறையின தகவல்களை மையப்படுத்தி இந்திய ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது,

ஐஎஸ் கிளர்ச்சியாளர்களின் அதிகரிப்புக்கான சாத்தியம் குறித்து புலனாய்வுத்துறையினரால் கேரளாவின் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,

ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் கிளர்ச்சியாளர்கள் தமது தளங்களை அங்கு இழந்துள்ளமையினால் இங்கு அவ்வாறான தாக்குதல்களை நடத்தி அவற்றை மீளப்பெறும் நோக்கிலேயெ இந்த தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வுத்துறையின் கடிதத்தில் குறிப்படப்பட்டுள்ளது.

கேரளாவின் கொச்சினை மையப்படுத்தி பலநோக்கு வர்த்தக கட்டடத் தொகுதிகள் இலக்ககாக அமையலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ் கிளர்ச்சியாளர்கள் குறித்து தமிழ் நாடு,ஆந்திர பிரதேசம் மற்றும் காஷ்மீர் ஆகிய உயர் காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்தியப் புலனாய்வுத்துறையினரால் கடிதம் அனுப்பபட்டுள்ளது,

கடந்த சில வருடங்களில் கேரளாவிலிருந்து 100க்கும் மேற்ட்டோர் ஐஎஸ் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து கொண்டுள்ளதாக இந்திய உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் கூறுகின்றார்,

தென் மாநிலங்களில் உள்ள 21 ஆலோசனை மையங்களில் 3 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றுவருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன,

அத்துடன் அண்மையில் இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுன் பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரை இந்திய புலனாய்வுத் துறை கண்காணித்து வருவதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிடுகின்றது,
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured