கம்பெரலிய செயற்றிட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட நிதியொதுக்கீட்டில் ரம்பாவா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வஹமல்கொல்லாவ சேகரிகம புதிய கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொதுக்கிணறு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் அண்மையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
வஹமல்கொல்லாவ பிரதேசத்திற்கு உட்பட்ட சுமார் 1500 இற்கும் அதிகாமான குடும்பங்களின் நீர் சம்மந்தமான பிரச்சினைகள் இக்கிணற்றின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமன்றி பயிர்செய்கை நடவடிக்கைகளுக்கும் இக்கிணற்றின் மூலம் மக்கள் நீரை பெற்றுக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது