Tuesday, October 8, 2019

முஸ்லிம் சமூகத்தின் மேல்நிலை மக்கள் கோட்டாபயவுடன்



கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் உள்ள சகல இனத்தவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகத்தினர் சிலருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவால் மாத்திரமே நாட்டுக்கு சௌபாக்கியத்தை கொண்டு வர முடியும் எனவும் அவரே அனைவரையும் சமமாய் நோக்க கூடியவர் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை நிபுணர்கள், வர்த்தகர் என முஸ்லிம் சமூகத்தின் மேல்நிலை மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்துள்ளதாக நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரே மக்களுக்கு நன்மை செய்த தலைவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Share:
Location: Kekirawa, Sri Lanka

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured