யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் இருந்து எழுவைத்தீவு மற்றும் அனலைத்தீவிற்கான படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த சேவைக்காக 137 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட எழுதாரகை படகு ஊர்காவற்துறை பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டதாக வட மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வேலாயுதம் சிவஞானசோதி குறிப்பிட்டார்.
நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இப்படகில் ஒரே தடவையில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்க முடியும்.
தீவுப் பகுதிகளையும் யாழ் நகரையும் இணைக்கும் பிரதான போக்குவரத்து சேவைக்கு எழுதாரகை படகு முக்கிய பங்குவகிக்கும் என நம்புவதாக வடக்கு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்தது.
இதனூடாக தீவுப் பகுதிகளின் பொருளாதார நடவடிக்கைகள் வலுப்பெறுவதுடன், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது