Wednesday, October 16, 2019

ஈக்குவடோரில் நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் மானியத்தை மீண்டும் வழங்குவதாக அரசு உறுதி


ஈக்குவடோரில் நிறுத்தப்பட்ட எரிபொருள் மானியத்தை மீண்டும் வழங்க அந்நாட்டு அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
எரிபொருள் மானியம் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட ஈக்குவடோர் பழங்குடியினருக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஐ.நா. அமைப்பும் கத்தோலிக்கத் திருச்சபையும் மத்தியஸ்தம் வகித்திருந்தன.
பல தசாப்தங்களாக வழங்கப்பட்டுவந்த எரிபொருள் மானியத்தை நிறுத்தியமைக்கு எதிராக அந்நாட்டுப் பழங்குடியினர் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர்.
இந்தப் போராட்டங்களை நிறுத்துவதற்காக அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று ஈக்குவடோர் பழங்குடியினர் நேற்றையதினம் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured