Monday, October 28, 2019

சுஜித்தின் மீட்புப் பணிகள் நான்காவது நாளாகத் தொடர்கிறது


திருச்சி – மணற்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சுஜித் எனும் 2 வயது குழந்தையை மீட்கும் முயற்சி நான்காவது நாளாக 70 மணித்தியாலங்களையும் கடந்து தொடர்கின்றது.
சுஜித் கடந்த 25 ஆம் திகதி பிற்பகல் ஆழ்துளைக் கிணற்றுக்குள் வீழ்ந்த துயரச்சம்பவம் இடம்பெற்றது.
நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ரிக் இயந்திரம் குழி தோண்டும் நடவடிக்கையை ஆரம்பித்தது.
கடினமான பாறைகளை ரிக் இயந்திரத்தைத் தவிர்த்து போர்வெல் இயந்திரத்தைக் கொண்டு துளையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் மீது வீழ்ந்துள்ள மணலை உறிஞ்சியெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமியிடம் இதுகுறித்து பிரமதர் நரேந்திர மோடி கேட்டறிந்து கொண்டுள்ளார்.
சிறுவன் சுஜித் மீண்டுவர பிரார்த்திப்பதாகவும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சுஜித் மீட்கப்பட வேண்டி பிரார்த்தனைகளும் தொடர்கின்றன.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured