Monday, October 28, 2019

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு


ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர், கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையில் இன்று (29) விசேட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இன்று முற்பகல் 10.30 மணியளவில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய பல காரணிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த 8 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 1923 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured