ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று (29) இடம்பெறவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில், கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இரவு 7 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 31ஆம் திகதி கைச்சாத்திடப்படவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் உடன்படிக்கை தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் பதவிகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளன.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மஹஜன எக்சத் பெரமுன, பிவிதுரு ஹெல உருமய, தேசிய சுதந்திர முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, சம சமாஜ கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் நடைபெறவுள்ள தேர்தலுக்காக ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி, கதிரை சின்னத்தில் களமிறங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.