அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.
ஜனாதிபதி தேர்தலை
தொடர்ந்து இஷாக் ரஹ்மான்
கட்சி மாறப்போவதாக
சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகிறது.
குறித்த செய்தி தொடர்பிலான உண்மை தன்மையை தெரிந்து கொள்ள எமது ஊடக பிரிவு அவரை தொடர்பு கொண்ட போது பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
அனுராதபுர மாவட்டத்தில் ஒரு சில வங்குரோத்து அரசியல்வாதிகளினால் நான் கட்சி மாறப்போவதாக பொய் வதந்திகள் பறப்பப்பட்டு வருகின்றது. அவை அனைத்தும் அப்பட்டமான பொய் என்பதினை நான் தெளிவாக கூறிக்கொள்கிறேன்.
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு வாக்களித்த 202,348 அனுராதபுர மாவட்ட வாக்காளர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்வதோடு அவர்களை நான் ஒருபோதும் கைவிடப்போவதுமில்லை அவர்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கப்போவதுமில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
-✍Wazeem Badhurdheen-