மஹிந்த ராஜபக்ஸ இன்று (21) பிற்பகல் 1 மணிக்கு பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் அவர் கடமைகளைக் பொறுப்பேற்கவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதமர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பில் இன்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதிக்கு அரசாங்கத்தினைக் கொண்டுசெல்வதற்காக பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, தனது விசேட உரையில் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.