இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லா (Riaz Hamidullah) நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
இதன்போது ஜனாதிபதிக்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.