Wednesday, November 20, 2019

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பாகிஸ்தானுக்கு வருமாறு ஜனாதிபதிக்கு இம்ரான் கான் அழைப்பு


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதற்கிணங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரின் அழைப்புக்கு இணக்கம் தெரிவித்துள்ளாரென கூறப்படுகிறது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், அவரை வாழ்த்துவதற்காக தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோதே இம்ரான் கான் இவ்வாறு கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் நாடும் இலங்கை மக்களும் அதிக வெற்றிகளையும் செழிப்பையும் அடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக இதன்போது இம்ரான் கான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமை மற்றும் பார்வையில் இலங்கை மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இந்தத் தேர்தல் பிரதிபலித்துள்ளதென அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கிடையிலான இருதரப்பு உறவுகள் குறித்தும் இந்த உரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured