சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பொறுப்பை ஏற்பார் என கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை வகிப்பதற்கு சஜித் பிரேமதாச பொருத்தமானவர் என்பதை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த 55 லட்சம் பொதுமக்கள் உணர்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சஜித் சஜித்பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டுள்ளமை தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.