Wednesday, November 20, 2019

பரவும் காட்டுத் தீ ; தெற்கு அவுஸ்திரேலியாவிற்கு பேரழிவு எச்சரிக்கை


காட்டுத் தீ காரணமாக தெற்கு அவுஸ்திரேலியாவுக்கு பேரழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பம் மற்றும் காற்றினால் இரு மாநிலங்களில் காட்டுத் தீ பரவும் வேகம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தஸ்மானியாவின் காட்டுத் தீ மிக மோசமான கட்டத்தை எட்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் தீவிரமாகி வரும் காட்டுத் தீயினால் இதுவரை அறுவர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் காட்டுத் தீயினால் 500 இற்கும் அதிகமான குடியிருப்புகள் அழிவடைந்துள்ளன.
மேலும், அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் காட்டுத் தீயினால் புகை மண்டலம் சூழ்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured