Thursday, September 7, 2023

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது.

 


(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்) 

கிளிநொச்சி மருதங்குனி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட வத்திரையான் மேற்கு மருதங்கணி பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் மருதங்கேணி விசேடபோலீஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய விசேட போலீஸ் பிரிவினரால் இன்றைய தினம்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 865 லிட்டர்  சோடாவும்  கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவறையும், கசிப்பு உற்பத்திக்கு  பயன்படுத்திய தண்ணீர் தாங்கி ஒன்றும் போலீஸாரால்  மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை  கிளிநொச்சி நீதிமன்றம் முன் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருதங்கேனி பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.max24news.com
2023.09.08
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured