(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
தந்தையும், மகளும் உயிரிழப்பு
இதில் 38 வயதுடைய தந்தையும் 6 வயதுடைய மகளுமே உயிரிழந்துள்ளனர்.
கந்தளாய் பகுதியில் இரவு தபால் ரயிலில் பாய்ந்து தந்தையும் மகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தையும் மகளும் நீண்ட நேரமாக ரயில் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்ததாகவும், ரயில் வந்ததும் தந்தையும் மகளும் ரயிலில் குதித்ததாகவும் அடையாளம் தெரியவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
திருகோணமலை -கந்தளாய் புகையிர நிலையத்திற்கு அருகில் இச்சம்பவம் இன்றிரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இருவரின் சடலமும் கந்தளாய் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.max24news.com
2023.09.06