(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
கிண்ணியா மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் பாடசாலையின் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு நடவடிக்கையொன்றை எடுத்துத்தெருமாறு பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கமைவாக ISRC நிறுவனத்தின் அனுசரணையுடன் இத்திட்டத்திற்கான ஆரம்ப வேலைகள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ் தௌபீக்யினால் புதன்கிழமை (6) ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் முளவ்பர், பழைய மாணவர் சங்ககத்தின் செயலாளர் சனான் ஆசிரியர், ISRC பிரதிநிதி லபீப் மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
http://www.max24news.com
2023.09.07