(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பேராசிரியர் லக்ஷ்மன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய அரசியலமைப்பு பேரவையில் அவரது பெயர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் திஸாநாயக்கவின் நியமனத்துடன் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய தேர்தல் ஆணையத்தின்
புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது.
http://www.max24news.com
2023.09.07