(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
நிலவும் மழையுடனான வானிலையால் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நேற்று(06) மாலை மீண்டும் நீடிக்கப்பட்டது.
இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றும்(07) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லிமீட்டர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்திலும் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு மலைசரிவுகளிலும் வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் கடும் காற்று வீசக்கூடுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
http://www.max24news.com
2023.09.07