அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் ஒரே நாளில் நடாத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த காலங்களில், மாகாண சபைத் தேர்தல்கள் ஒரே தடவையில் நடாத்தப்படாமல் தனித்தனியாக நடாத்தப்பட்டதன் மூலம், மனித வளம் உள்ளிட்ட ஏனைய வளங்கள் பாரிய விரயத்திற்குள்ளாகின்றமை, பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு அவசியமான அரசாங்கத்தின் சேவைகளை வழங்குவதில் தாமதம், தேர்தல் காரமான வன்முறை நடவடிக்கைகள், தேர்தல் மோடி மற்றும் அரச வளங்களின் முறையற்ற பயன்பாடு போன்றன அதிகரித்துள்ளது.
இவ்வாறான காரணங்களை கருத்திற கொண்டு அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தல்களுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடாத்தும் வகையில், அரசியல் யாப்பு மற்றும் மாகாண சபைகள் சட்டத்தில் அது தொடர்பான விதப்புரைகளை திருத்தம் செய்யும் பொருட்டு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
