Saturday, December 23, 2017

சதொச லொறிகளிலும் கூட ஹேரோயின் பிடிபடும் போதைப் பொருட்கள் எங்கே ? மஹிந்த

அன்று தேயிலை உற்பத்தியில் உலக பிரசித்தி பெற்றிருந்த இலங்கை, தற்பொழுது போதைப் பொருள் வியாபாரத்தில் பிரபல்யம் அடைந்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்பொழுது போதைப் பொருள் பயன்பாடு, விற்பனை, களஞ்சியம் என்பவற்றுக்கான சுவர்க்கபுரியாக இலங்கை மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சதொச லொறிகளிலும் கூட ஹேரோயின் எடுத்துச் செல்லப்படும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. 

தற்பொழுது கொள்கலன்கள், லொறிகளில் தான் போதைப் பொருள் பிடிபடுகின்றது. 

இவ்வாறு பிடிபடும் போதைப் பொருட்களுக்கு என்ன நடைபெறுகின்றது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

போதைப் பொருளை இல்லாதொழித்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப இந்த அரசாங்கத்துக்கு ஒழுங்கான வேலைத்திட்டமொன்று இல்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Image result for mahinda rajapaksa
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured