Monday, December 4, 2017

குயிக் சில்வர் ஜிம் நடத்திய உடற்கட்டழகர் போட்டி

குயிக் சில்வர் ஜிம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருட பூர்த்தியை கொண்டாடும் வகையில் அங்கத்தவர்களுக்கு இடையில் நடைபெற்ற உடற்கட்டழகர் போட்டிஅண்மையில் தெமட்டகொடையில் அமைந்துள்ள ஜிம் வளாகத்தில் நடைபெற்றது. ஆடவர்களுக்கானஉடற்கட்டழகர் போட்டிகள் 60, 65, 70 கிலோகிராம் எடைப் பிரிவுகளின் கீழ் நடைபெற்றன.
60 கிலோகிராம் எடைப்பிரிவில் கே.கெனத் முதலாம் இடத்தையும், 65 கிலோகிராம் எடைப்பிரிவில் கே.எஸ்.டி. சில்வா முதலாம் இடத்தையும், 70 கிலோகிராம் எடைப்பிரிவில் யுூ.பி.ஜி. கொட்டேதூவ முதலாம் இடத்தையும் வென்றெடுத்தனர். இது தவிர ஜிம்மில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற பி.டி.ஜே. மதூஷிகாவும் மேடையில் தோன்றி தமது உடற்கட்டழகை வெளிப்படுத்தி தான் ஆண்களுக்கு சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்தார்.
அத்துடன் மாஸ்டர்ஸ் போட்டியில் மூவர் கலந்துகொண்டதுடன் அவர்களில் இருவர் 65 வயதுக்குமேற்பட்டவர்களாவர். இது தவிர மாற்றுத்திறனாளி மாணவனான சஹன் பிரபுத்தவும் தனது உடற்கட்டழகை வெளிப்படுத்தியவாறு பாடல் ஒன்றுக்கு நடனமாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் இது தவிர 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய உடற்கட்டழகன் போட்டியில் மாஸ்டர்ஸ் பிரிவில் தங்கம் வென்றவரும் குயிக் சில்வர் ஜிம்மின் பிரதம பயிற்றுனருமான மில்டன் டி சில்வாவின் உடற்கட்டழகு கண்காட்சி நடனம் ஒன்றும் இடம்பெற்றது.
போட்டிகளில் கலந்துகொண்ட அனைவரையும் ஊக்குவிக்கும் முகமாக பதக்கங்கள், பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிகளுக்கு பிரதம விருந்தினர்களாக மேல் மாகாண சபை உறுப்பினர் சுசில் கிந்தல்பிட்டிய, கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் தர்ஷன் பத்திரண ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured