பிரதமர் ரணிலுய்க்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கைச்சாத்திடவில்லை என தெரியப்படுகிறது.
இன்றைய அரசுக்கும் பிரதமருக்கும் எதிராக நேற்று சபாநாயகரிடம் நம்பிக்கை இல்லா பிரேரணை ஒப்படைக்கப்பட்டது.
இதில் கூட்டு எதிர் கட்சியை சேர்ந்த 51 பாராலோம்ன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். எனினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ இதில் கைச்சாத்திடவில்லை.
அவர் கைச்சாத்திடாமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அளஹப்பெரும தெரிவிக்கையில் "முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் வாக்கு, வருகை, கைச்சாத்து என்பன சாதாரண உறுப்பினரை விடவும் அதிகம் பொறுப்பு வாய்ந்தது. அதனை தகுந்த சமையத்தில் பாவிப்போம் என்றும், குறித்த நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு அவரே எங்களை வழிநடத்தியதாகவும்" குறிப்பிட்டிருந்தார்.
