கொலம்பியாவில் பொலிஸ் நிலையமொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸார் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.
கொலம்பியாவில் ஜனாதிபதிக்கு எதிராக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நகர செயலாளர் Jaime Asprilla தெரிவித்துள்ளார்.
கொலம்பியாவில் ஓய்வூதியம் உள்ளிட்ட சில நிதித்திட்டங்கள் நிறுத்தப்பட்டமைக்கு எதிராக தொழிற்சங்கங்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் மீது நேற்று (22) பொலிசார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.