தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மரக்கறி வகைகளின் தொகை அதிகரித்துள்ளதால், விலைகள் குறைவடைந்திருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது தாழ்நில மரக்கறி வகைகள் பல மத்திய நிலையத்திற்கு கிடைப்பதுடன், போஞ்சியும் பெருமளவில் கிடைப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த 3 நாட்களாக ஒரு கிலோ போஞ்சி 20 ரூபா தொடக்கம் 40 ரூபா வரையில் விற்பனையாவதால் மரக்கறி வகைகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
கேரட், லீக்ஸ், பீட்ரூட் ஆகிய மரக்கறி வகைகள் தவிர்ந்த ஏனைய மரக்கறி வகைகள் 10 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையில் வெவ்வேறான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.