அமைச்சரவையில் இன்று மாலை விசேட கூட்டம் ஒன்று இடம்பெறும் எனவும், அதன் போது பிரதமர் பதவி விலகி, அரசாங்கத்தை கையளிக்க தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ அமோக வெற்றி பெற்று ஜனாதிபதியானார்.
மேலும் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தோல்வி அடைந்தார். இதனால், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சியின் பிரதி தலைவர் பதவியை அவர் இராஜினாமா செய்திருந்தார்.
இந்த நிலையில், விரைவில் பொது தேர்தல் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்ற நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலகி அரசாங்கத்தையும் கையளிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.