நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமென, வீதி, பெருந்தெருக்கள் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம், தமது அமைச்சு பொறுப்புக்களை உத்தியோகப்பூர்வமாக பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.