Saturday, September 9, 2023

காணி தகராறு காரணமாக ஒருவர் கத்தியால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் தலைமறைவு.


(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்) 

காணி தகராறு காரணமாக ஒருவர் கத்தியால் வெட்டி படுகொலை- சந்தேக நபர் தலைமறைவு.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீப்பிலிமான பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வத்தளை  பிரதேசத்தை சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்க எஸ்.சுந்தரலிங்கம்  என்பவரே  பலத்த வெட்டு காயங்களுக்கு இழக்கான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவத்தோடு தொடர்புடைய  கொழும்பு வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

காணி பிரச்சினயால் ஏற்பட்ட முரண்பாட்டினாலே  நேற்று   (09) சனிக்கிழமை  இந்த  வெட்டுச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக   ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தப்பி சென்றுள்ள தாகவும் இவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் பொலிசார்   மேலதிக விசாரணைகளை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

வெட்டு காயங்களுடன் உயிரிழந்துள்ள  நபரின் சடலம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற் கொண்ட பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.max24news.com
2023.09.10
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured