தலிபான் கிளர்ச்சியாளர்களால், பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு பேராசிரியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த தலிபான் கிளர்ச்சியாளர்களை விடுவிக்கக் கோரிய, தலிபான் கிளர்ச்சியாளர்களின் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டமையை அடுத்தே, இந்தப் பேராசிரியர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஃப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியராக கடமையாற்றிய அமெரிக்கர் ஒருவரும் அவுஸ்திரேலியர் ஒருவருமே, தலிபான் கிளர்ச்சியாளர்களால் பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.